Saturday, April 18, 2026
Home > Cinema > மகனின் முதல் பட பூஜை… அதில் கூட கலந்துகொள்ளாத விஜய்! அப்படி என்ன தான் பஞ்சாயத்து !!

மகனின் முதல் பட பூஜை… அதில் கூட கலந்துகொள்ளாத விஜய்! அப்படி என்ன தான் பஞ்சாயத்து !!

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய். தந்தையைப் போலவே அவரும் நடிகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில் அவர் பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமாகிய ரவீனா தாஹாவைக் காதலிப்பதாகவும், இப்போது இருவரும் டேட்டிங் செய்வது வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதை இரு தரப்பில் இருந்து யாருமே மறுக்கவோ அல்லது சம்மதிக்கவோ இல்லை.

இந்நிலையில் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. ஆனால் அதில் சஞ்சய்யின் குடும்பத்தினர் யாருமே கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய மகன் சினிமா உலகில் அறிமுகமாகும் போது அதில் தன்னுடைய பங்களிப்பு இல்லாமல் விஜய் பார்த்துக் கொண்டது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

விஜய் மட்டும் இல்லை, விஜய்யின் மனைவி சங்கீதாவோ அல்லது சஞ்சய்யின் தாத்தா பாட்டியான எஸ் ஏ சந்திரசேகரோ, ஷோபாவோ யாருமே கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

சஞ்சய் இயக்கும் படத்தில் யார் யார் நடிக்க உள்ளார்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள் என்பது பற்றிய தகவலும் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.