நடிகை ஆஷ்னா சவேரி 1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை மும்பையில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2014 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியாக போகவில்லை வணிக ரீதியாகவும் தோல்வி படமாகவே அமைந்தது.

இவர் 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.இவர் படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்தார்.

தமிழ் படங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் மற்ற மொழிகளில் வாய்ப்புகளை தேடி வந்தார் ஆனாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை .


தமிழிஷ் நகுல் நடிப்பில் வெளிவந்த பிரம்மா.காம் படத்தில் நடித்தார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம்
என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக நடித்த ஐந்து படங்களுமே சரியாக போகவில்லை.

இதனால் கிளாமர் ரூட்டில் இறங்கினார். இவர் விமல் நடிப்பில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் மிகவும் கிளாமராக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியாக கடந்த மாதம் வெளியான கன்னி தீவு படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஆஷ்னா சவேரி. இப்போது சில படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் இணைந்து டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரை இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
