இந்திய அணியின் அனுபவம் மிக்க பவுலரான முகமது ஷமி, தற்போது உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 23 விக்கெட்கள் வீழ்த்தி ஹீரோவாக வலம் வருகிறார். இத்தனைக்கும் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் 4 போட்டிகளில் களமிறக்கப்படவில்லை.
அதற்குக் காரணம் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை ஆல்ரவுண்டர் என்ற காரணத்துக்காக பயன்படுத்தியது இந்திய அணி. ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட, அதற்கு பிறகுதான், ஷமி அணிக்குள் சேர்க்கப்பட்டு மாயாஜாலங்களை நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் ஷமி கடந்த சில ஆண்டுகளாக ஷமி, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்து உள்ளார். சியர் லீடரான ஹசீன் ஜஹான் என்ற பெண்ணை மணந்த அவர், ஒரு கட்டத்தில் ஹசீனுக்கு முன்பே திருமணம் ஆகி அந்த திருமணம் மூலம் குழந்தைகள் இருந்தது தெரியவந்து அதிர்ச்சியாகியுள்ளார்.
இதை தன் மனைவியிடம் கேர்க்கவே !! இருவருக்கும் இடையே சண்டை முற்றியது.
இதையடுத்து ஷமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த ஹசீன், ஷமி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் அதையெல்லாம் பொய் என்று நிரூபித்து இந்திய அணிக்குள் மீண்டும் வந்தார் ஷமி. இந்த தனிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் கடந்து வந்துதான் ஷமி இப்போது உலகக் கோப்பை தொடரில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.