விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கிய நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகள் ரிலீஸாகி ஒரு ஷோ முடிந்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்தனர்.
ஆனால் முதல் காட்சிகள் முடிந்த உடனேயே கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என சொல்லி வந்தாலும், டிவிட்டரில் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
பலரும் இந்த படம் லோகேஷ் இயக்கியது போலவே இல்லை என்றும், அவரின் இணை இயக்குனர் ரத்னகுமார் இயக்கியது போல உள்ளதாகவும் கூறினர். முன்னர் விஜய்க்கும் லோகேஷ்க்கும் இடையே சண்டை எனப் பரவிய தகவல் உண்மைதான் போல எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் படம் பற்றி வெளியான முக்கியமான விமர்சனம் என்னவென்றால், படத்தின் இரண்டாம் பாதி மிகவும் மோசமாக உள்ளது என்றும், இரண்டாம் பாதியில் சொல்லப்படும் பிளாஷ் பேக் சொதப்பலாக உள்ளது என்றும் கூறப்பட்டது. ஆனால் அதை சமாளிக்க லோகேஷ், அந்த பிளாஷ்பேக் பொய்யாக சொல்லப்பட்டது எனக் கூறி மேலும் காமெடி செய்தார்.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி “படத்தின் இரண்டாம் பாதி சரியாக இல்லை. அதை எதாவது செய்யுங்கள் என விஜய் கூறியதாகவும், ஆனால் அதற்கு லோகேஷ் ‘காட்சிகளாக பார்த்தால் சரியாக இருக்கும்” என ஆர்வக் கோளாறில் கூறிவிட்டதாகவும் இப்போது ஒத்துக் கொண்டுள்ளார்.
படத்தின் எடிட்டரான பிலோமின் ராஜும் இதை இயக்குனர் லோகேஷிடம் கூறியதாகவும், ஆனால் அதையும் லோகேஷ் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கும் படத்துக்காவது ஒழுங்காக திரைக்கதை எழுத வேண்டும் என ரசிகர்கள் லோகேஷுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
