Wednesday, July 29, 2026
Home > Cinema > சின்ன அலட்சியத்தால் வந்த வினை… பிளாஸ்டிக் சர்ஜரிக்காக வெளிநாடு செல்கிறாரா விஜய் ஆண்டனி!

சின்ன அலட்சியத்தால் வந்த வினை… பிளாஸ்டிக் சர்ஜரிக்காக வெளிநாடு செல்கிறாரா விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவிக் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் இடையில் நான் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து நடிப்பில் முழு மூச்சாக இறங்கினார்.

தன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர் இப்போது சுத்தமாக இசையமைப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் கைவசம் கொலை, ரத்தம் என ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரிசையாக ரிலீஸ் ஆக உள்ளன.

இந்நிலையில் அவரே இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது படகு சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கிய போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு முகத்தில் சில இடங்களில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காயத் தழும்புகள் வெளியே தெரியாத வண்ணம் இருக்க விஜய் ஆண்டனி வெளிநாட்டுக்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.