Thursday, March 28, 2024
Home > News > 3 ரயில்கள் மோதி மிகப்பெரிய விபத்து !! கிடு கிடுவென உயரும் பலி எண்ணிக்கை !! சென்னை நோக்கி வந்த ரயில் !! எப்படி நடந்தது

3 ரயில்கள் மோதி மிகப்பெரிய விபத்து !! கிடு கிடுவென உயரும் பலி எண்ணிக்கை !! சென்னை நோக்கி வந்த ரயில் !! எப்படி நடந்தது

ஒடிசா மாநிலம் பகங்கா அருகே 2 எக்ஸ்பிரஸ் மற்றும் 1 சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் இல் இருந்து சென்னை வரும் கோரமண்டல் ரயில் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கிஉள்ளது.

இதுவரை இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய தெளிவான தகவல் வெளியாகவில்லை என்றாலும். வெளியான முதல்கட்ட தகவலின்படி முதலில் சரக்கு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் சரிந்ததாகவும்.

`

பின்னர் அந்த பெட்டிகளின் மீது கோரமண்டல் ரயில் மோதியுள்ளது. அதில் பெருத்த சேதம் ஏற்பட்ட நிலையில். அதன் பின்னர் ஹவுரா ரயிலும் மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் கோரமண்டல் ரயிலின் 4-5 பெட்டிகள் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக கோரமண்டல் ரயிலில் 869 பேர் சென்னை வர டிக்கட் முன்பதிவு செய்து பயணிதுள்ளனர். முன்பதிவு செய்யாமல் 300 பேர் பயணிதிருக்களாம் என்று கூறப்படுகிறது.

```
```

மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 60 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் . அது போதாமல் வேன்கள் , பஸ்கள் , கார்களிலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருகின்றனர். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே முதல் உதவியும் செய்து வருகின்றனர்.

இன்னும் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய சரியான தகவல் வெளியாகவில்லை . மேலும் தகவல்கள் வரும் நேரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.