தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது (28/12/23) காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார்.
நிஜத்திலும் மற்றவர்களுக்கு ஓடிப்போய் உதவி செய்து பலரின் துயரங்களை தீர்தத கடவுளாக வாழ்ந்து வந்தார். அரசியலிலும் ஈடுபட்டு மிக விரைவிலேயே எதிர்ககட்சி அளவிற்கு வளர்ந்த இவர் பின் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே முடங்கினார்.
குணமடைந்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்குவார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு சினிமா துறைக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே ஒரு பேரிழப்பு
