சின்னத்திரை நடிகைகளுக்கு சினிமா கதவுகள் அவ்வளவு எளிதாக திறக்காது. ஆனால் சமீபகாலத்தில் அந்த மாய பிம்பம் உடைந்து வருகிறது. அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த அவர் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர். இப்போது வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றன.
இந்நிலையில் இப்போது சீரியலில் கோலோச்சும் நடிகைகள் ஐந்து பேரைப் பற்றியும் அவர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் பற்றியும் ஒரு சிறப்புப் புள்ளிவிவரத்தை இப்போது பார்ப்போம்.
பாப்ரி கோஷ் – சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடிக்கும் இவர் ஒரு எபிசோடுக்கு 10000 ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
சுந்தரி கேப்ரில்லா- இவர் முதலில் டப்ஸ்மாஷ் போன்ற சமூகவலைதள வீடியோக்கள் மூலமாகதான் வைரலானார். அதன் பின்னர் அவர் சுந்தரி சீரியலில் மெயின் ஹீரோயினாக சேர்க்கப்பட்டார். அந்த சீரியலின் வெற்றியை அடுத்து அவரின் சம்பளமும் அதிகமானது. இப்போது அவர் ஒரு எபிசோடுக்கு 12000 ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
ஆலியா மானசா –விஜய் டிவியின் மூலம் பிரபலமான மற்றொரு சீரியல் நடிகை ஆல்யா மானசா. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள அவர் இப்போதும் சன் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு ஒரு எபிசோடுக்கு 20000 ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
கயல் சைத்ரா ரெட்டி –ஆந்திராவைச் சேர்ந்த சைத்ரா ரெட்டி துணிவு உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அவரின் கயல் சீரியல் இப்போது சன் டிவியின் ப்ரைம் டைம் சீரியலாக உள்ளது. இதனால் இவரின் சம்பளமும் அதிகமாகியுள்ளது. ஒரு எபிசோடுக்கு அவர் 20000 ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.
எதிர்நீச்சல் மதுமிதா – எதிர்நீச்சல் சீரியலை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர் நடிகர் மாரிமுத்து. அவரின் மறைவுக்குப் பின்னரும் அந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சீரியலின் கதாநாயகியான மதுமிதா ஒரு எபிசோடுக்கு 20000 ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
