Friday, April 17, 2026
Home > Cinema > ரஜினியோடு 17 முறை மோதிய விஜயகாந்தின் படங்கள்… அட இந்த படங்கள் எல்லாம் ஒன்னா ரிலீஸ் ஆச்சா?

ரஜினியோடு 17 முறை மோதிய விஜயகாந்தின் படங்கள்… அட இந்த படங்கள் எல்லாம் ஒன்னா ரிலீஸ் ஆச்சா?

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தற்போது (28/12/23) காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கேப்டன் விஜயகாந்த்தாக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் ஒரு பிரபலம். சினிமாவில் எப்போதும் தனக்கு நாட்டின் மேல் உள்ள அக்கறையை காட்டிய வண்ணம் இருப்பார். அவரின் இறுதி ஊர்வலம் மக்கள் கடலுக்கு நடுவே நடந்தது. அவரின் உடல் தேமுதிக கட்சி அலுவலகம் உள்ள கோயம்பேட்டில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்த் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்கள் இப்போது பலராலும் பேசப்பட்டு வருகின்றன. ரஜினி, கமல் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் மூன்றாவது சூப்பர் ஸ்டாராக நுழைந்து சாதித்தவர் விஜயகாந்த்.

முதலில் தனக்கான மார்க்கெட்டைப் பிடிக்க போராடிய அவர் 80 களில் சூப்பர்ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்து தமிழ் சினிமாவின் மூன்றாவது சூப்பர் ஸ்டார் நடிகராக ஆதிக்கம் செலுத்தினார்.

இந்நிலையில் இவரின் 17 படங்கள் ரஜினியின் படங்களோடு நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சில படங்கள் வெற்றியும், சில படங்கள் தோல்வியும் அடைந்துள்ளன.

அந்த படங்கள் எவை என்று இப்போது பார்க்கலாம். முதல் முதலாக 1985 ஆம் ஆண்டு நான் சிவப்பு மனிதன் திரைப்படமும்,  விஜயகாந்தின் ராமன் ஸ்ரீ ராமன் திரைப்படமும் மோதிக் கொண்டன. கடைசியாக 1999 ஆம் ஆண்டு விஜயகாந்தின் பெரியண்ணா படமும், ரஜினியின் படையப்பா படமும் மோதிக் கொண்டன.

1986 தீபாவளிக்கு ரஜினிக்கு மாவீரன் படமும், விஜயகாந்துக்கு தர்மதேவதை, தழுவாத கைகள் படங்களும் ரிலீஸாகின. 1987 மார்ச்சில் ரஜினியின் வேலைக்காரன் படமும், விஜயகாந்துக்கு வேலுண்டு வினையில்லை படமும் வெளியானது. அதே ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் மனிதன் படமும், விஜயகாந்தின் உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு என இரு படங்களும் வெளியாகின.

1988 செப்டம்பரில் ரஜினியின் தர்மத்தின் தலைவன் படமும், விஜயகாந்தின் செந்தூரப்பூவே படமும் ரிலீஸ் ஆகின. 1988 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினியின் குரு சிஷ்யன் படமும், விஜயகாந்தின் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும் ரிலீஸ் ஆகின.

1990 பொங்கலுக்கு ரஜினியின் பணக்காரன் படமும், விஜயகாந்தின் புலன் விசாரணை படமும், 991 தீபாவளிக்கு ரஜினியின் தளபதி படமும் விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படமும், 1992 பொங்கலுக்கு ரஜினிக்கு மன்னன் படமும், விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் படமும் , 1993 பிப்ரவரியில் ரஜினியின் எஜமான் படமும், விஜயகாந்தின் ஏழை ஜாதி படமும், 1994 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் வீரா படமும், விஜயகாந்தின் ஆனஸ்ட்ராஜ் படமும் , 1995 பொங்கலுக்கு ரஜினியின் பாட்ஷா படமும், விஜயகாந்தின் கருப்பு நிலா படமும் என பல படங்கள் மோதியுள்ளன.