சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், மரியா, சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. மிகவும் சுமாராக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலர் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. கதாநாயகியின் நடிப்பும் உச்சரிப்பும் கொஞ்சம் கூட செட்டாகவில்லை என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துகளை தெரிவித்துள்ளனர். படத்தை பார்க்க தூண்டும் ஆர்வத்தை இந்த டிரைலர் பெரியளவில் உருவாக்கவில்லை.

பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் மற்றும் விஜய்க்கு பிறகு இந்த சாதனையை சிவகார்த்திகேயன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
