Friday, March 29, 2024
Home > Cinema > ஆதாம்’ஆ… பிக்பாஸ் வீட்டுக்குள் பயந்து நடுங்கிய ஜி பி முத்து… முதல் நாளே அதகளம்!

ஆதாம்’ஆ… பிக்பாஸ் வீட்டுக்குள் பயந்து நடுங்கிய ஜி பி முத்து… முதல் நாளே அதகளம்!

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள ஜி பி முத்து முதல் நாளிலேயே ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்களோடு தொடர்பு கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்களையும் கமல்தான் தொகுத்து வழங்கினார்.

`

சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல் அப்படியே பிக்பாஸ் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.

நேற்று மாலை இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அறிமுகம் மற்றும் பிக்பாஸ் இலல்த்தின் முதல் நாள் ஒளிபரப்பானது. இதில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து தனியாக தான் மட்டும் இருப்பதால் பயந்து தனக்கு தானே பேசிகொண்டு அடுத்த போட்டியாளரை உடனடியாக அனுப்பக் கேட்டுக்கொண்டார்.

```
```

அப்போது அவரோடு பேசிய கமல் “கொஞ்ச நேரம் தனியாக இருக்கவே இப்படி பயப்படுகிறீர்களே… ஏவாள் வரும் வரை ஆதாம் எவ்வளவு பயந்திருப்பார்” எனக் கேட்க, அதைப் புரிந்து கொள்ளாத ஜி பி முத்து “ஆதாம்’ஆ” எனக் கேட்க அதிர்ச்சியான கமல் பின்னர் அதை ஒருவாறு சமாளித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இப்படி முதல் நாளே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார் ஜி பி முத்து.