Saturday, May 2, 2026
Home > Cinema > ரஜினி முதல் அனிருத் வரை… சென்னை ஷூட்டிங் பத்தி நெகிழ்ந்த ஷாருக் கான்!

ரஜினி முதல் அனிருத் வரை… சென்னை ஷூட்டிங் பத்தி நெகிழ்ந்த ஷாருக் கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதமாக சென்னையில் நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மிக மோசமான ஆண்டுகளாக அமைந்தன. அவரின் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் சில ஆண்டுகள் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த அவர் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார்.

அதில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படம். இந்த படத்தில் தமிழ்க் கலைஞர்களான நயன்தாரா, யோகி பாபு மற்றும் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த அனுபவம் பற்றி ட்வீட் செய்துள்ள ஷாருக்கான் “தலைவர் ரஜினிகாந்த் நேரடியாக எங்கள் செட்டுக்கு வந்து வாழ்த்தியது.  நயன்தாராவோடு திரைப்படம் பார்த்தது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரோடு ஆழ்ந்த உரையாடல்கள். மற்றும் தளபதி விஜய் அளித்த சுவையான உணவு. நன்றி அட்லி மற்றும் பிரியா உங்கள் அன்பான உபசரிப்புக்கு” என கூறியுள்ளார்.

ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.