Saturday, April 18, 2026
Home > Cinema > விஜய்யின் வாரிசு ஷூட்டிங் எப்பதான் முடியும்… தாமதமாகும் தளபதி 67!

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் எப்பதான் முடியும்… தாமதமாகும் தளபதி 67!

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்‌ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் மாதமே முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது நவம்பர் வரை செல்லும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அடுத்து விஜய் நடிக்க இருக்கும் தளபதி 67 தொடங்குவது திரைப்படம் மேலும் தாமதமாகும் என தெரிகிறது. அந்த படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகளை இயக்குனர் லோகேஷ் இப்போது மேற்கொண்டு வருகிறார்.