தமிழ் சினிமாவில் புதிய பாதை திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானார் நடிகை பார்த்திபன். அந்த படத்தில் நடிகை சீதா கதாநாயகியாக நடித்திருந்தார். அப்போதே அவர் பெரிய ஸ்டார் நடிகையாக இருந்தார்.
அந்த படத்தின் போது சீதா பார்த்திபன் மீது காதலை வெளிப்படுத்த, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார் சீதா. அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். இதையடுத்து ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது ஏன் என்பது பற்றி நடிகை சீதா ஒரு நேர்காணலில் நேரடியாக பதில் சொல்லாமல் மறைமுகமாக சுற்றி வளைத்து பேசியுள்ளார். அதில் “திருமணமான பெண்கள், திருமணமாக போகும் பெண்கள் தங்கள் வருமானத்துக்கான வழியைக் கட்டாயம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
அப்படி இல்லாமல் உங்கள் அனைத்து தேவைகளுக்கும் கணவரையே சார்ந்திருந்தால் அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு ஆதிக்க உணர்வு வந்துவிடும். எல்லா கணவர்களும் அப்படி என்று நான் சொல்ல மாட்டேன். அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலைக்கு சென்றால் உங்களை அழகாக பராமரித்துக் கொள்வீர்கள். ஆனால் வீட்டிலேயே இருந்தால் உங்களுக்கு அது தோணாது.
மேலும் தன்னுடைய கணவர் பார்த்திபனை ஏன் பிரிந்தார் என்பது குறித்த கேள்விக்கு “ஒரு படத்தில் சுஹாசினி ஒரு பாடல் பாடுவார். என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான்” என்று. அதுபோலதான் நானும் நினைத்தேன். அப்படி எதிர்பார்க்க எனக்கு உரிமையில்லையா?” என ஆதங்கத்தோடு கேள்வி எழுப்பியுள்ளார்.
சீதாவின் இந்த கேள்வியால் பார்த்திபனுக்கு வேறு ஏதேனும் பெண்களோடு தொடர்பிருந்து அதனால் இருவரும் பிரிந்திருப்பார்களோ என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
