Saturday, August 1, 2026
Home > Cinema > திருமணத்துக்கு முன்பே உடலுறவு… சர்ச்சைக் கருத்தை பேசிய குஷ்பு.. அவர் யாருடன் இருந்தா!! பயில்வான் ஓபன் டாக்

திருமணத்துக்கு முன்பே உடலுறவு… சர்ச்சைக் கருத்தை பேசிய குஷ்பு.. அவர் யாருடன் இருந்தா!! பயில்வான் ஓபன் டாக்

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் 90 களில் கோலோச்சிய நடிகை குஷ்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ்நாட்டில் குஷ்பு இட்லி எல்லாம் ட்ரண்ட் ஆனது. மேலும் சிலர் குஷ்புவுக்கு கோயிலும் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.

அவ்வளவு பிரபலமாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார்.

திமுகவில் சில காலம் இயங்கியவர், பின்னர் காங்கிரஸுக்கு சென்றார். அங்கும் சில காலம் மட்டுமே இருந்தவர் தற்போது பாஜகவுக்கு தாவியுள்ளார். தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.

இப்போது மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமா தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் குஷ்பு தமிழக பெண்களின் கற்பு பற்றி ஒரு கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போது பல பெண்கள் திருமணத்துக்கு முன்பே உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதுபோல உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என பேசியிருந்தார். இதற்கு அப்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதுபற்றி இப்போது விமர்சித்து பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் “குஷ்புவுக்கு வேண்டுமென்றால் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கலாம்.  அவரிடம் திருமணத்துக்கு முன்னர் யாரோடு உடலுறவு வைத்து இருந்தீர்கள் என்று கேட்டால் சும்மா இருப்பாரா. தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெண்களும் அவரைப் போல இருக்க வேண்டுமென நினைப்பது தவறு” என காட்டமாக பேசியுள்ளார்.