Friday, May 3, 2024
Home > Cinema > என் உடலில் இருப்பது இந்த பிரச்சனைதான்… சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

என் உடலில் இருப்பது இந்த பிரச்சனைதான்… சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா

தென்னிந்திய மொழிகளான தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் ஹிட்டான நிலையில் தன்னுடைய சக நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சில ஆண்டுகளிலேயே முறிந்தது. இருவரும் விவாகரத்து செய்து இப்போது தங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

`

விவாகரத்துக்கு பின்னர் சமந்தாவின் மார்க்கெட் தென்னிந்தியாவைத் தாண்டியும் பாலிவுட் வரை சென்றது. இப்போது அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது  தவிர யசோதா மற்றும் ஷகுந்தலம் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து முடித்து அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

```
```

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் தன்னுடைய புகைப்படங்கள் எதையும் சமூகவலைதளங்களில் பகிரவில்லை. அதனால் வருக்கு தோல் சம்மந்தமான அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் இப்போது சமந்தா “myositis என்ற உடல் நலப் பிரச்சனையால் நான் பாதிக்கப்பட்டேன். இதிலிருந்து குணமானதும் அதை தெரிவிக்கலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை அதிக நாட்கள் தேவைப்படுகிறது. உங்கள் அன்பே என்னுடைய ஒவ்வொரு கடினமான நாளையும் எதிர்கொள்ள உதவுகிறது. எனது மருத்துவர்கள் நான் முழுமையாக குணமாகிவிடுவேன் என உறுதியாக இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும், எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் அமைந்துள்ளன. ஆனால் நான் இப்போது குணமாவதற்கு அருகில் உள்ளதாக நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்” எனக் கூறியுள்ளார்.