விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் வரை ஷூட்டிங் இருப்பதாகவும், விஜய் நடிக்கும் காட்சிகளே 20 நாட்களுக்கும் மேலாக படமாக்கப் பட வேண்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் பிரகாஷ் ராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இனிமேல்தான் படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதனால் வாரிசு திரைப்படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
