ரஜினிகாந்த், தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ளதை அடுத்து முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த பூஜையில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் படத்தில் தான் ஒரு சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளதாகவும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக ரஜினிகாந்த் குசேலன் படத்தில் நடித்த போது, அந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்துள்ளதாக சொல்லி விளம்பரப் படுத்தினர்.
அதனால் அந்த படம் ப்ளாப் ஆனதை அடுத்து ரஜினி சம்பளத்தில் இருந்து பணத்தை திருப்பிக் கொடுத்தார். அதே போல குளறுபடி நடந்து விடக் கூடாது என்பதால் ரஜினி இப்போதே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை அறிவித்து விட்டார் போல.