தற்போது சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு இணையான கிரேஸ் இருந்து வருகிறது. அவர்களுக்கு சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்தவகையில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகையாக இருந்து வருகிறார் ரேஷ்மா
பாரதி கண்ணம்மா – 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் ரேஷ்மா பிரசாத். இந்நிலையில் இவர் சினிமாவை போலவே சீரியல் நடிகைகளுக்கும் பாலியல் அத்துமீறல் நடக்கும் என்பதை ஓப்பனாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசும் போது “என்னிடம் பலரும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நேரடியாகவே பேசியுள்ளார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓக்கேவா எனக் கேட்பார்கள். ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு மட்டுமில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள்.

ஆடிஷனின் போது இதற்காகவே ஒரு செக்ஷன் வைத்திருப்பார்கள். நம்முடைய பெயர், முகவரி, செல்பேசி எண் என எல்லாம் இருப்பது போல அட்ஜெஸ்ட்மெண்ட் என்றும் வைத்திருப்பார்கள். அதில் ஆம் அல்லது இல்லை என டிக் செய்யவேண்டும். நம் முன்னாலேயே அவரை அட்ஜெஸ்ட் செய்தால் எளிதாக இந்த கேரக்டரை வாங்கிவிடலாம் எனக் கூறுவார்கள்.

நாம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதில்லை எனக் கூறினாலும் மீண்டும் மீண்டும் அதையே கேட்பார்கள். பின்புலம் கொண்ட நடிகைகளுக்கும் இதே நிலைதான். எங்கு அட்ஜஸ்ட்மெண்ட் அட்ஜெஸ்ட்மெண்ட் எனக் கேட்டதால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், எனக்கு எப்போது வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போது நடித்துக் கொள்கிறேன். வாய்ப்பே வரவில்லை என்றாலும் பரவாயில்லை என ஒதுங்கி விட்டேன். இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
