Thursday, June 4, 2026
Home > Cinema > 100 பேருக்கு மத்தியில் ட்ரஸ்ஸ மொத்தமா கழட்டி மாத்தணும்… எல்லோரும் அப்ப இத செய்வாங்க – இரவின் நிழல் அனுபவம் குறித்து பிரியங்கா ரூத் கருத்து!

100 பேருக்கு மத்தியில் ட்ரஸ்ஸ மொத்தமா கழட்டி மாத்தணும்… எல்லோரும் அப்ப இத செய்வாங்க – இரவின் நிழல் அனுபவம் குறித்து பிரியங்கா ரூத் கருத்து!

sai priyanka ruth shared her experience about Iravin Nizhal Movie: பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் இரவின் நிழல். இந்த படம் நான் லீனியர் பாணியில் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படம் சினிமா ரசிகர்களை அதன் மேக்கிங்குக்காக கவர்ந்தாலும், உள்ளடக்கம் யாரையும் கவரவில்லை. ஆனாலும் இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது.

sai priyanka ruth

இரவின் நிழல் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேகா நாயர். அவர் இறந்து கிடக்க அவர் மார்பில் பாலுக்காக ஒரு குழந்தை வந்து அழுதுகொண்டிருப்பது போன்ற காட்சியில் அவர் நடித்திருந்தார். அந்த காட்சி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்திருந்தார்.

அதையடுத்து பயில்வான் பீச்சில் வாக்கிங் போகும்போது அவரிடம் சண்டையிட்டு அந்த வீடியோவை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றார் ரேகா. அதே போல இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்தவர் சினேகா குமார்.

இவர் அந்த படத்தில் தான் எப்படி கஷ்டப்பட்டு நடித்தேன் என்பது குறித்து சமீபத்தில் கூறியுள்ளார். அதில் நாங்கள் ஒரு காஸ்ட்யூமில் ஒரு சீன் நடித்து முடித்துவிட்டு அடுத்த சீனுக்காக காஸ்ட்யூமை கழட்டி போட்டுவிட்டு ஓடிக்கொண்டே அடுத்த காஸ்ட்யூமை மாற்றுவோம். அதைப் பொறுக்கிக் கொள்ள ஆட்கள் இருப்பார்கள். அதே போல நகைகளையும் மாற்றிக் கொள்வோம்.

சுற்றி ஆட்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் பார்க்க முடியாது. எல்லோரும் அப்படிதான் கஷ்டப்பட்டு நடித்தோம். பார்த்திபன் சார் என்ன சொன்னாரோ அதை பாலோ பண்ணினோம். நான் நடித்த சீனை ரசிகர்களோடு ஒன்றாக பார்த்த போது பிரமிப்பாக இருந்தது.

நானாவது உள்ளே ஒரு வெள்ளை நிற ஆடையை உள்ளே போட்டு இருந்தேன். மற்றொரு நடிகை பிரியங்கா புடவையை கட்டி இருந்தால் அவர் முழுவதையும் மாற்றி தான் மற்ற உடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். என்று கூறியிருந்தார்.

sai priyanka ruth experience in Iravin Nizhal Movie

இப்போது பிரியங்கா ரூத் இரவின் நிழல் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் இடையே ட்ரஸ்ஸை மாற்ற வேண்டும். மற்றவர்களாவது ஒரு ட்ரஸ்ஸின் மேல் மற்றொரு ட்ரஸ்ஸை மாற்றுவார்கள். ஆனால் நான் ட்ரஸ்ஸை கழட்டிவிட்டு வேறொரு ட்ரஸ்ஸை போடவேண்டும்.

sai priyanka ruth unseen photos
How sai priyanka ruth changes her dress In Iravin Nizhal Non Linear movie

நான் ட்ரஸ்ஸை கழட்டி போட்டிவிட்டு இன்னொரு ட்ரஸ்ஸை போட்டுக்கொண்டே ஓடுவேன். அப்போது செட்டில் இருந்த 100 பேரும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். என்னுடைய உடல் பற்றி எனக்கு நம்பிக்கை இருந்தது. என் உடல் மற்றவர்களுக்கு அசிங்கமாக தெரியாது என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.” என்று கூறியுள்ளார். அவரின் இந்த மனம் திறந்த பேச்சு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.