Monday, May 20, 2024
Home > செய்திகள் > மதுவிருந்து…! வசமாய் சிக்கிய ராகுல்..! வெளியான வீடியோ..

மதுவிருந்து…! வசமாய் சிக்கிய ராகுல்..! வெளியான வீடியோ..

3-5-22/14.47PM

நேபாளம் : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாளத்தில் ஒரு மதுவிருந்தில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராகுலின் நெருங்கிய நண்பரான சம்னிமா உடாஸ் என்பவரின் திருமணம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ராகுல் நேபாளம் சென்றிருக்கிறார். இந்த சம்னிமா உடாஸ் சர்ச்சைக்கு பெயர் போனவர்.

`

இந்தியாவின் சில பகுதிகளை நேபாளம் தங்களது பகுதி என வரைபடத்தை வெளியிட்டிருந்தது. அந்த சம்பவத்தில் இந்தியாவுக்கெதிராக குரல் கொடுத்திருந்தவர் இந்த உடாஸ். மேலும் தற்போது ராகுலுடன் மதுவிருந்தில் கலந்து கொண்டது ஹூ யான்ஹி என்ற நேபாளத்துக்கான சீனதூதர் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

```
```

இந்த ஹூ யான்ஹி முன்னாள் பிரதமர் கே.பி ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் சிக்க வைத்தவர் என தெரியவந்துள்ளது. இந்திய பிரதமர் மோடியின் ஐரோப்பிய பயணத்தை விமர்சிக்கும் காங்கிரஸ் ராகுலின் இந்த மதுவிருந்து எந்தமாதிரியான முட்டு கொடுப்பார்கள் என தேசமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

https://twitter.com/dhaval241086/status/1521348311277764608?t=SZRCvdRQH6ITcKU1Kn6vOw&s=19
https://twitter.com/thakkar_sameet/status/1521351178893680640?t=JZD6f44XBSkwPU3xxuYrRQ&s=19

……உங்கள் பீமா