Friday, August 14, 2026
Home > Cinema > ரஜினி, கமல் வந்தும் செல்ஃப் எடுக்காத கலைஞர் 100 நிகழ்ச்சி… வைரலாகும் போட்டோஸ்!

ரஜினி, கமல் வந்தும் செல்ஃப் எடுக்காத கலைஞர் 100 நிகழ்ச்சி… வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் கதாசிரியராக கோலோச்சியவர் கலைஞர் கருணாநிதி. அவர் எழுதிய பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் ஆகிய திரைப்படங்கள் அவரின் வசனத்துக்காகவே ஹிட் அடித்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

சினிமாவில் இருந்தபடியே திமுகவில் முக்கியத் தலைவராக வளர்ந்து வந்த கலைஞர் 1969 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார். அதன் பின்னரும் தொடர்ந்து பல படங்களுக்கு அவர் கதை வசனம் எழுதினார். தொடர்ந்து தான் முதல்வராக இருக்கும் போதெல்லாம் தமிழ் சினிமாவுக்கு பல நல திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து கலைஞர் 100 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கேற்றார் போல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுமார் 20000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5000 பேர் கூட வரவில்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பேசினர்.

ஆனாலும் இந்த நிகழ்ச்சி மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாகக் கிடந்தன. அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் வராதது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

அஜித் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என தெரிகிறது. ஆனால் விஜய் சென்னையில் இருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் அவர் தன்னுடைய அரசியல் வருகை குறித்துதான் வரவில்லை என சொல்லப்படுகிறது.