தமிழ் சினிமாவில் தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தான் திரையுலகில் அறிமுகமானார். அந்தவகையில் இவரின் பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதிலும் குறிப்பாக 2008ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி இசையில் வெளியான நாக்க மூக்க பாடல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் தனி மவுசை பெற்று வருகிறது.
இதனை ஆண்டுகளை கடந்தும் இன்னும் இந்த பாடலுக்கான மவுசு குறையவில்லை என்றுதான் கூறவேண்டும். அதற்கு உதாரணமாக விஜய் ஆண்டனியின் இந்த பாடல் சமீபத்தில் அமெரிக்காவில் ஒலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களை போல அமெரிக்காவில், தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக America’s got talent என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள இந்தியாவை சேர்ந்த “v unbeatables” என்ற நடன குழு தான் இப்போது நாக்கா முக்கா பாடலுக்கு நடனமாடி உள்ளனர் . இந்த குழு ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு நடந்த America’s got talent நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்று வெற்றி பெற்றுள்ளனர் .
வீடியோ கீழே உள்ளது👇
அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த நடனக்குழு ஒன்று பங்கேற்றிருந்தது. கிட்டத்தட்ட 20 பேர் அடங்கிய அந்த குழுவில் ஒரே ஒரு பெண் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் விஜய் ஆண்டனியின் நாக்க மூக்க பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த அரங்கையே அதிரவைத்துள்ளனர் என்று சொன்னால் மிகையாது.
பின்னணியில் நாக்க முக்கா பாடல் ஒலிக்க இந்த குழு நடனம் . மோட்டார் வாகன சாகசம் மட்டுமின்றி பல சாகசங்களை செய்து ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
