How much money Poornima Ravi Got from Bigg Boss : தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்த முறை போட்டியாளராக சென்றுள்ள பூர்ணிமா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.
இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.

அதையடுத்து பூர்ணிமாவின் தந்தை அளித்த பேட்டியில் பூர்ணிமா சில தவறுகள் செய்வது உண்மைதான் என பேசியுள்ளார். அதில் “பூர்ணிமாவுக்கு தலைக்கணம் எல்லாம் எதுவும் இல்லை. அவர் புரியாமல் சில தவறுகளை செய்துவிடுகிறார் அவ்வளவுதான். அவர் இந்த விளையாட்டை புரிந்து விளையாடினாலே போதும். பூர்ணிமா இரட்டை அரத்தம் கொண்ட தொணியில் பேசுவது தவறுதான். அவர் வெளியே வந்ததும் அதுகுறித்து நாங்கள் அவளுக்கு எடுத்து சொல்லுவோம்.
பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் உள்ளது நட்புதான். ஒருவேளை வெளியே வந்தும் அவருக்கு விஷ்ணுவை பிடித்திருந்தாலும் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். வீடு என்றால் சச்சரவுகள் இருக்கதான் செய்யும். அதனால் என் மகள் மீது தரம்குறைந்த விமர்சனங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். கமல் என் மகள் மீது வன்மத்தைக் கொட்டவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார்” என பக்குவமாக பேசியுள்ளார்.

Total salery Poornima Got from Bigboss
இந்நிலையில் இப்போது பிக்பாஸ் இறுதியில் வைக்கப்படும் பணப்பெட்டி டாஸ்க்கில் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துள்ளார். அதில் 16 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. இது வரி 90க்கும் மேற்பட்ட நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 லட்சம் ரூபாய் அளவுக்கு அவர் சம்பளமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மொத்தமாக 30 லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பாதித்து வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். எப்படியோ இத்தனை நாட்கள் தப்பித்த பூர்ணிமா தான் வெல்ல மாட்டோம் என்பதை உணர்ந்து பணப்பெட்டியை எடுத்தது புத்திசாலித்தனமான முடிவுதான் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
