Saturday, April 18, 2026
Home > Cinema > வெங்கட்பிரபு படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெங்கட்பிரபு படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து NC22 என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மாநாடு படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தை தற்போது NC 22 என்று தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்காக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

கடந்த மாதம் தொடங்கிய ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது.  இந்த படத்தில் நடிகர் ஜீவா அவர் வில்லனாக நடிக்க உள்ளாராம். இந்த வேடத்தில் முதலில் நடிக்க நடிகர் அருண் விஜய் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசிய விருதுபெற்ற பிரியாமணி, சம்பத், பிரேம்ஜி அமரன் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியவர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.