Thursday, April 30, 2026
Home > Cinema > கால் முறிவுக்குக் கஷ்டப்பட்டு நடக்கும் பூஜா ஹெக்டே…!

கால் முறிவுக்குக் கஷ்டப்பட்டு நடக்கும் பூஜா ஹெக்டே…!

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் படப்பிடிப்பில் காயம் அடைந்து ஓய்வெடுத்து வந்தார்.

தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் காயமடைந்து காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருந்தார்.

இதையடுத்து அவர் இப்போது ஓய்வுக்குப் பிறகு கஷ்டப்பட்டு நடக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.