Saturday, April 1, 2023
Home > பொழுதுபோக்கு > ஆஹா… அடுத்த மைல் கல் வசூல் சாதனையில் காலடி வைத்த பொன்னியின் செல்வன்!

ஆஹா… அடுத்த மைல் கல் வசூல் சாதனையில் காலடி வைத்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

`

3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. மேலும் தமிழகத்தில் ஐந்தே நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், கேஜிஎஃப் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது பொன்னியின் செல்வன்.

இந்நிலையில் இப்போது வெளியாகி 12 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 500 கோடி ரூபாயை வசூலை எட்டும் என சொல்லப்படுகிறது.