Friday, April 19, 2024
Home > Cinema > தனுஷின் வாத்தி பட உரிமையைக் கைப்பற்றிய இந்திய ஓடிடி நிறுவனம்!

தனுஷின் வாத்தி பட உரிமையைக் கைப்பற்றிய இந்திய ஓடிடி நிறுவனம்!

தனுஷ் நடிப்பில் அடுத்து வாத்தி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

`

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தோடு ரிலீஸ் ஆனதால் பெரிய அளவில் வசூலை ஈட்ட முடியவில்லை.

```
```

இதையடுத்து தனுஷ் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் அல்லூரி இயக்கியுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜுன் நடத்தும் ஆஹா ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களை நெட்பிளிக்ஸ் அல்லது ப்ரைம் வீடியோ போன்ற பெரிய நிறுவனங்கள்தான் கைப்பற்றும். ஆனால் வளர்ந்து வரும் நிறுவனமான ஆஹா ஓடிடி இரு மொழிகளிலும் கைப்பற்றியுள்ளது.