Wednesday, May 1, 2024
Home > செய்திகள் > கோவிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..! பின்னணி

கோவிலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..! பின்னணி

4-4-22/11.02AM

கர்நாடகா : சமீபத்தில் ஹிஜாப் சர்ச்சையை கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாற்றியது ஊடகங்கள். இதைத்தொடர்ந்து பல பெரும்பான்மை மதத்தை சேர்ந்த நபர்கள் கொல்லப்பட்டனர். பலர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

அதையடுத்து ஹிந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு கடை கொடுக்க கோவில் நிர்வாகங்கள் மறுத்துவருகின்றன. ஹிந்து அமைப்புகளும் இதை வலியுறுத்திவருகின்றன. இதனிடையே தட்சிணா கன்னடா மாவட்டம் பாப்பநாடு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற துர்காபரமேஸ்வரி கோவில் வளாகங்களிலும் அதனை சுற்றியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில் “கோவில்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் மற்றும் பசுக்களை கொல்வோருக்கு கோவிலில் இடம் இல்லை” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பானது. ஏற்கனவே இந்த கோவில் வளாகத்தில் இஸ்லாமியர்களுக்கு கடை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

`

மேலும் இந்த கோவிலின் சிறப்பு என்னவெனில் வருடம் ஒருமுறை நடக்கும் திருவிழாவின் கடைசிநாளில் ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு கோவில் பிரசாதம் வழங்கப்படும். இது நூறாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயமாகும். திடீரென ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் குறித்து பதிலளித்த நிர்வாகம் இந்த போஸ்டருக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என மறுத்துவிட்டது.

```
```

மேலும் கப்பலோட்டிய தமிழன் கப்பல் வாங்க இஸ்லாமியர் ஒருவர் நிதி உதவிசெய்தார் என ஆதாரபூர்வமற்ற தகவல்கள் வாய்வழிசெய்தியாக பரவுவதுபோல இந்த கோவிலை நிர்மாணிக்க பாப்பா என்ற இஸ்லாமிய வணிகர் நிதி உதவி செய்ததாகவும் அதனால் கோவில் திருவிழா பிரசாதம் ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு செல்வதாகவும் ஒரு கூற்று நிலவிவருகிறது.

….உங்கள் பீமா