வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்ற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறியுள்ளார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திருமணம் ஆகி 5 ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான்கு மாதங்களே ஆன நிலையில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விசாரணை நடத்தி அளிக்கும் தகவலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இன்று இதுபற்றி பேசியுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் “நயன்தாரா தம்பதியினர் குழந்தைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தேவைப்பட்டால் அவர்கள் இருவரும் எங்கள் குழுவினரால் விசாரணைக்கு அழைக்கப்படலாம்” எனக் கூறியுள்ளார்.
