Tuesday, September 29, 2026
Home > Cinema > ‘டெவில்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் இயக்குனர் மிஷ்கின்… வெளியான முக்கிய அப்டேட்!

‘டெவில்’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் இயக்குனர் மிஷ்கின்… வெளியான முக்கிய அப்டேட்!

இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக டெவில் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை எடுத்து வருபவர். அவர் இயக்கிய சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா மற்றும் ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தவை.

இயக்கம் மட்டும் இல்லாமல் பாட்டு பாடுதல், பாடல் எழுதுதல் மற்றும் நடிப்பு என பல துறைகளில் செயல்பட்டு வரும் மிஷ்கின், இப்போது முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.  தன்னுடைய தம்பி ஆதித்யா எழுதி இயக்கும் டெவில் படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோரோடு மிஷ்கினும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கந்த 4 மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.