Thursday, May 14, 2026
Home > Cinema > கடைசியில் கஜினி பார்ட் 2 வுக்கு திட்டம் போடும் முருகதாஸ்…. ஆரம்பமே முட்டுக்கட்டையா?

கடைசியில் கஜினி பார்ட் 2 வுக்கு திட்டம் போடும் முருகதாஸ்…. ஆரம்பமே முட்டுக்கட்டையா?

இயக்குனர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் தொடங்கவில்லை.

தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். அதையடுத்து அவர் இயக்கிய ரமணா மற்றும் கஜினி ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி இயக்குனராக்கின. அதிலும் கஜினி திரைப்படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக்கினார். அதனால் அவரின் சம்பளமும் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தன.

அதன் பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்து ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி உச்சத்துக்கு சென்றார். இந்நிலையில் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அதையடுத்து அவர் விஜய்யுடன் மீண்டும் இணைய இருந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் படம் இயக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய ஹிட் படமான கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சூர்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் தகவல்கள் பரவுகின்றன.

ஆனால் கஜினி 2 திரைப்படத்தை உருவாக்குவதில் மிகப்பெரிய சிக்கல் ஒன்று உள்ளது. முதல் பாகத்தின் தயாரிப்பாளர் தரப்பும் முருகதாஸ் மற்றும் சூர்யா தரப்புக்கும் இடையே கருத்து மோதல் எழுந்து, கஜினி ரிலீஸின் போது பிரச்சனைகள் வெடித்தன. இதனால் தயாரிப்பு தரப்பு இருவர் மீதும் கோபத்தில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க அவர்கள் ஒத்துக்கொள்வார்களா என்ற கேள்வி உள்ளது.