Saturday, August 22, 2026
Home > Cinema > தன் கனவுப் பாத்திரத்தில் நடித்த கார்த்தியைப் பாராட்டிய சூப்பர்ஸ்டார்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

தன் கனவுப் பாத்திரத்தில் நடித்த கார்த்தியைப் பாராட்டிய சூப்பர்ஸ்டார்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.

இந்நிலையில் இப்போது 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் ஏற்கனவே படத்தைப் பார்த்து பாராட்டிய நிலையில் ரஜினியும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார். முன்னதாக் ஜெயம் ரவியை அழைத்துப் பாராட்டிய ரஜினி இப்போது வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியை அழைத்து பாராட்டியுள்ளார்.’

இது சம்மந்தமாக கார்த்தியின் பதிவில் “உங்களின் அழைப்பு மிகவும் ஸ்பெஷலானது சார். மற்றவர்களைப் பாராட்டும் உங்களின் குணம் அன்புக்குரியது. எப்போதும் உங்கள் மீது அன்பும் மரியாதையும்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். முன்னதாக பொன்னியின் செல்வன் படம் உருவாக்கப்பட்டால் அதில் ரஜினிதான் நடிக்கவேண்டும் என சிவாஜியும், ஜெயலலிதாவும் கூறி இருந்ததாக பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.