நடிகை குஷ்பு உடல்நலப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் 90 களில் கோலோச்சிய நடிகை குஷ்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ்நாட்டில் குஷ்பு இட்லி எல்லாம் ட்ரண்ட் ஆனது. மேலும் சிலர் குஷ்புவுக்கு கோயிலும் கட்டி அதிர்ச்சியைக் கொடுத்தனர்.
அவ்வளவு பிரபலமாக இருந்த குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை மணந்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் சின்னத்திரை மற்றும் ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருந்தவர் ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார்.
திமுகவில் சில காலம் இயங்கியவர், பின்னர் காங்கிரஸுக்கு சென்றார். அங்கும் சில காலம் மட்டுமே இருந்தவர் தற்போது பாஜகவுக்கு தாவியுள்ளார். தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார்.
இப்போது மீண்டும் சின்னத்திரை மற்றும் சினிமா தயாரிப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் பகிர, அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
