Saturday, May 4, 2024
Home > செய்திகள் > பால்கோட் விமான ஊழல்..! வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

பால்கோட் விமான ஊழல்..! வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

13-1-22/11.00am

டெல்லி : பால்கோட் விமான தாக்குதலுக்கு பயன்பட்ட மிரேஜ் 2000 விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2011 ல் காங்கிரஸ் அரசு மிரேஜ் 2000 வகை போர்விமானங்களுக்கு தொழில்நுட்பங்களை மேம்படுத்த பிரான்ஸை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். காங்கிரஸ் அரசு எந்த ஒரு ஒப்பந்தம் என்றாலும் அதற்க்கு ஒரு இடைத்தரகரை நியமித்திருந்தது.

அந்தவகையில் இந்த ஒப்பந்தத்திற்கு ராகுலின் மைத்துனரான ராபர்ட் வதேராவின் நெருங்கிய நண்பரான சஞ்சய் பண்டாரி என்பவரை நியமித்தது. ஆயுத விற்பனை இடைத்தரகரான சஞ்சய்க்கு இந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொடுக்க 167கோடி கமிஷன் பேசப்பட்டது. பிரான்ஸை சேர்ந்த தேல்ஸ் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு சஞ்சய்க்கு 75 கோடி முதல்தவணையாக வழங்கப்பட்டது.

`

அதன்பின்னர் ஆட்சி மாறி பிஜேபி மத்தியில் அமர்ந்ததும் எந்த ஒரு ஒப்பந்தம் போடவும் இடைத்தரகர்களை நியமிக்கும் மரபை ஒழித்தது. மேலும் ஆயுத ரகசியங்களை கசியவிட்ட சஞ்சய் மீதும் வழக்கு தொடுத்தது. அதையடுத்து சஞ்சய் லண்டன் தப்பிச்சென்றான். இந்நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் 2016 ல் தேடப்படும் குற்றவாளியான சஞ்சய் மீது மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக சஞ்சய் தனக்கு வரவேண்டிய கமிஷன் தொகை 167 கோடியில் 92 கோடி இன்னும் பாக்கியிருப்பதாகவும் ராகுலின் உத்தரவின் பேரின் தேல்ஸ் நிறுவனம் தரமறுப்பதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் ராகுலின் அழுத்தம் காரணமாகவே பிரான்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

மேலும் இதே சஞ்சய் தான் ரஃபேல் வகை விமானங்கள் வாங்க இடைத்தரகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. ரபேல் ரபேல் என மேடைக்கு மேடை தொண்டை கிழிய கதறும் காங்கிரஸ் மிரேஜ் 2000 முறைகேட்டை பற்றி வாய் திறக்குமா என பிஜேபியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

…..உங்கள் பீமா