Tuesday, September 22, 2026
Home > Cinema > சீனு ராமசாமி பண்ண டார்ச்சர போன் போட்டு சொல்லி அழுத இளம் நடிகை… இவர் செய்த லீலைகளுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு வெளிப்படையாக கூறிய பிஸ்மி!!

சீனு ராமசாமி பண்ண டார்ச்சர போன் போட்டு சொல்லி அழுத இளம் நடிகை… இவர் செய்த லீலைகளுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு வெளிப்படையாக கூறிய பிஸ்மி!!

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தின் மூலம் அறிமுகம் ஆனர் மனிஷா யாதவ். பின்னர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை மனிஷா யாதவ். இந்த திரைப்படம் காதல் மற்றும் 18+ இரட்டை அர்த்த வசனங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

பின்னர் இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களை அடுத்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, ஒரு குப்பை கதை  போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இந்த படங்கள் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்றுத்தரவில்லை.

அதன் பின்னர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடினார்.இவர் தமிழில் கடைசியாக சண்டிமுனி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத ஒரு சர்ச்சையின் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.

சினிமா பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “மனிஷா யாதவ் என்ற நடிகை சீனு ராமசாமி இயக்கிய இடம்பொருள் ஏவல் படத்தில் நடிக்க கொடைக்கானல் சென்றார். அங்கே அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத மனிஷா படப்பிடிப்பை விட்டுவிட்டு சென்னை வந்ததும் எனக்கு போன் போட்டு அவர் கொடுத்த டார்ச்சர்களை கூறி புலம்பினார். அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே செல்ல காரணமாக இருந்தார் சீனு ராமசாமி” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

இது வைரல் ஆன நிலையில் இப்போது இயக்குனர் சீனு ராமசாமி பிஸ்மிக்கு பதிலளிக்கும் வகையில் ” வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க… இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்.” எனக் கூறி ஒரு பட நிகழ்ச்சியில் மனிஷா இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வரும் நிலையில் நடிகை மனிஷா இதுபற்றி வாய் திறந்தால்தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.