Saturday, August 1, 2026
Home > Cinema > விசித்ராவுக்கு நடந்த அத்துமீறல் !! அப்போவே கேப்டன் விஜயகாந்த் கிட்ட புகார் செய்தோம் அப்போது அவர்….

விசித்ராவுக்கு நடந்த அத்துமீறல் !! அப்போவே கேப்டன் விஜயகாந்த் கிட்ட புகார் செய்தோம் அப்போது அவர்….

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் விசித்ரா திரைத்துறையில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் கொடுமை பற்றி பேசி கவனம் ஈர்த்துள்ளார். அதில் தெலுங்கு படம் ஒன்றில் பணியாற்றும் போது தன்னை அந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும், ஹீரோவும் பாலியல் ரீதியாக அவமரியாதை செய்து தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் தன்னை அவமரியாதை செய்தது யார் என்பதை பெயர் குறிப்பிடாமல்தான் பேசியிருந்தார்.

ஆனால் ரசிகர்கள் அவர் சொன்னதை வைத்து சம்பவம் நடந்தது ”பலேவடி பாசு” என்ற படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் என்றும் அவரை டார்ச்சர் செய்தது அந்த படத்தின் ஹீரோ பாலகிருஷ்ணா மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் விஜய்தான் என்றும் கூறி, இருவருக்கும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து பாலகிருஷ்ணாவுக்கு நிறைய கண்டனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து எழுந்து வரும் நிலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி விசித்ராவின் கணவர் யுடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் இந்த பிரச்சனைகள் பற்றி அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்திடம் புகார் அளித்தோம்.  அதனால் மிகவும் வருத்தப்பட்ட விசித்ரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்தார் என்று கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விசித்ராவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து விசித்ராவின் கணவர் கூறியிருப்பது, விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார். அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான். இந்த டாபிக் பற்றி பேசினாலே அவர் ரொம்ப லோ ஆகி விடுவார். திருமணத்திற்கு பிறகு இப்போது தான் இதைப் பற்றி பேசி இருக்கிறார். என் பெரிய மகன் வந்து இது போன்ற பிரச்சனை இருந்ததா? என்று கேட்கிறான். அவனுக்கு 21 வயதாகிறது