Monday, May 20, 2024
Home > செய்திகள் > அடுத்தடுத்த லாக்கப் டெத்..! முதல்வருக்கே கட்டளையிட்ட சுட்டுதல் நாயகர்

அடுத்தடுத்த லாக்கப் டெத்..! முதல்வருக்கே கட்டளையிட்ட சுட்டுதல் நாயகர்

29-4-22/13.00PM

திருவண்ணாமலை : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில் அடுத்தடுத்து நிகழும் காவல்நிலைய மரணங்கள் தமிகத்தில் ஒருவித பயத்தை உண்டாகியிருக்கிறது. தற்போதைய ஆட்சியில் சாதாரண பாமரனின் உயிர் மற்றும் உடமைக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அச்சம் நிலவிவருவதாக அரசியல் கட்சியினர் குற்றசாட்டை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக லாக்கப் டெத் நடந்துள்ளது ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கையை அதிகரித்துள்ளதாக மக்கள் குறைகூறிவருகின்றனர். இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதி தட்டாரணையை சேர்ந்த தங்கமணி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த சூழலில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென மரணமடைந்துவிட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து சுட்டுதல் நாயகர் தனது ட்விட்டரில் “திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தட்டரணையைச் சார்ந்த தங்கமணி, நீதித்துறைக் காவலில் கிளைச் சிறையிலிருந்த சூழலில் பலியாகியுள்ளார். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனே உயிரிழந்திருக்கிறார். இது அதிர்ச்சி..அளிக்கிறது. அண்மையில் சென்னை விக்னேஷ் காவல்துறையின் விசாரணையில் பலியான துயரத்தைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இந்த சாவு கவலையளிக்கிறது.

`

தமிழக அரசு, இதனை ‘சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு’ உட்படுத்த வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். காவல்துறை மற்றும் நீதித்துறை..கட்டுப்பாட்டில் இத்தகைய சாவுகள் இனி நிகழாமல் தடுக்கப்பட்ட அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலியான தங்கமணியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.

```
```

சாத்தான்குளம் ஜெயராஜ் பெலிக்ஸ் மரணத்தில் ஐநாசபை காதுகளுக்கு எட்டும்வரை கதறிய நடிகர்களோ அரசியல்வாதிகளோ அடுத்தடுத்து நிகழும் லாக்கப் மரணங்களை பற்றி வாய்திறப்பதில்லை எனவும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து விஷயங்களை தமிழக மீடியாக்கள் வெளியில்கசியவிடாமல் பார்த்துக்கொள்வதாகவும் பிஜேபியினர் முணுமுணுத்து வருகின்றனர். மேலும் ஜெயராஜ் பெலிக்ஸ் மரணத்தில் அறிக்கை வெளியிட்ட நாலடியார்கூட தற்போது கள்ளமௌனம் சாதிப்பதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா