இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து புள்ளிகளின்படி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா முதல் தங்க பதக்கத்தை வென்றிருக்கிறது.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய நீரஜ் சோப்ராவை பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கப்பதக்கத்தை மட்டுமே பெற்றிருக்கிறது. அந்த முதல் தங்க பதக்கத்தை வென்றவர் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா. 2008ல் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றது. 2021ல் இரண்டாவது மெடலை பெற்று பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.
போட்டி நடந்த மைதானத்தில் பாரத தேசத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி நீரஜ் சோப்ரா கைகளில் தவழ்ந்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது.
..உங்கள் பீமா