Friday, May 3, 2024
Home > அரசியல் > எல்.முருகன் போல தானும் வரமுடியாதா..? ஏங்கும் அண்ணாமலை..?

எல்.முருகன் போல தானும் வரமுடியாதா..? ஏங்கும் அண்ணாமலை..?

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். மேலும் அமைச்சர் மஸ்தான் உட்பட திமுக நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.



`

இந்நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்த்தித்த அமைச்சர் பொன்முடி தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில் ” அண்ணாமலைக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் வரலாறு தெரியாமல் பேசிவருகிறார். நான் ஒரு வரலாற்று பேராசிரியர்.

```
```

அதனால் சொல்கிறேன். திராவிடம் என்ற வார்த்தையே 1800 களில் தான் வந்தது என்று. அண்ணாமலைக்கு தலைவர் ஸ்டாலின் துரைமுருகன் ஆகியோர் ஏற்கனவே பதிலளித்துள்ளனர். சிந்துசமவெளி நாகரித்தோடு ஒன்றிவந்தது திராவிடம். நான் பிரதமரிடம் நிதியுதவியை கோரவில்லை. முதலமைச்சர் முக ஸ்டாலின் கல்வித்தரத்தை உயர்த்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்றே கேட்டுக்கொண்டேன்.

உங்கள் வணிகத்தை ஆன் லைனில் விளம்பரப்படுத்த வேண்டுமா…? மிகக்குறைந்த செலவில் உங்கள் வணிபமும் ஆன்லைனில்..! தொடர்புக்கு 7338816562  http://www.tsimart.com

எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. தரம் உயரவேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தரத்தை உயர்த்தவே நான் முதல்வன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அக்காலத்தில் படிக்கமுடிந்ததா. ஆனால் அவை எல்லாவற்றையும் மாற்றியமைத்து அனைவரும் சமம் என மாற்றியது திராவிட மாடல்.



அண்ணாமலை நான்பேசியதை இவ்வளவு கொச்சைப்படுத்துவார் என நினைக்கவில்லை. என்ன செய்வது அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். அடுத்து தானும் எல்.முருகன் மாதிரி வரமுடியாதா என அண்ணாமலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்” என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.