Friday, April 17, 2026
Home > Cinema > நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டா வந்துட்டு அங்க கை போடுவாங்க… அடிக்கணும் போல இருக்கும்… வி ஜே ஜாக்குலின் பகிர்ந்த தகவல்!

நிகழ்ச்சிக்கு கெஸ்ட்டா வந்துட்டு அங்க கை போடுவாங்க… அடிக்கணும் போல இருக்கும்… வி ஜே ஜாக்குலின் பகிர்ந்த தகவல்!

விஜய் டிவி புகழ் ஜாக்லின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதற்கு முன்னரே கனா காணும் காலங்கள் , ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார்.

ஆனாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக இருந்தது கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான். அதன் பின்னர் இவர் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது பலரது வரவேற்பையும் பெற்றது. 1996 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ஜாக்லின்.

இப்போது டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஜாக்லின் அளித்துள்ள ஒரு பேட்டியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “விருந்தினர்கள் என்று வருபவர்கள் தோள் மேல் கைபோட்டு பேசுவார்கள். உங்களை தூக்கவா என்று கேட்பார்கள். எனக்கெல்லாம் அப்படி செய்தால் அவர்களை அடிக்கணும் போல இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.