நடிகை அமலா தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களோடு நடித்த அவர் 1992 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவுக்கு அவர் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அகில் அக்கினேனி என்ற மகன் இருக்கிறார்.

அவர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கிசுகிசுக்கள் எழுந்தன. அதை உறுதிப்படுத்துவது போல இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய அமலா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் லைஃப் ஈஸ் பியூட்டிபுல் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் அமலா நடித்தவரை அவர் கிளாமரான வேடங்களில் அதிகமாக நடித்ததில்லை. இந்நிலையில் அவர் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளித்து ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது எந்த படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

