Sunday, May 19, 2024
Home > செய்திகள் > தேசிய அளவில் குறைந்த ஹிந்துக்களின் சதவிகிதம்..! மசோதாவை வாபஸ் வாங்கிய மத்திய அமைச்சர்

தேசிய அளவில் குறைந்த ஹிந்துக்களின் சதவிகிதம்..! மசோதாவை வாபஸ் வாங்கிய மத்திய அமைச்சர்

2-4-22/13.17PM

புதுதில்லி : மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான தனிநபர் மசோதாவை 2019ல் பிஜேபி ராஜ்யசபா எம்பி ராகேஷ் சின்ஹா தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவை நேற்று அவர் வாபஸ் வாங்கியுள்ளார்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா மீதான விவாதங்கள் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் மாண்டவியாவின் தலையீட்டுக்கு பிறகு இந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. மாண்டவியா கூறுகிறார் “அரசால் நடத்தப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு பிறகு TFR (மொத்த கருவுறுதல் விகிதம்) குறைந்துள்ளது.

Mandavya health minister

சுமார் ஒரு பெண்ணுக்கு 2குழந்தை என தேசிய அளவில் குறைந்துள்ளது.நேஷனல் பேமிலி ஹெல்த் சர்வே (NFHS) அறிக்கையின்படி மக்கள்தொகை வளர்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டுவருகிறது.1991ல் 2.14 ,2001ல் 1.97, 2011ல் 1.64 என குழந்தைபிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. அதேபோல டீனேஜ் குழந்தை பிறப்பு மற்றும் டீனேஜ் திருமணம் முறையே 6.8% மற்றும் 23.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.

`

நான் சின்ஹாவை கேட்பதெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட அணைத்து சமூகத்தினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அந்த மசோதாவை திரும்ப பெற உங்களுக்கு கோரிக்கை எழுப்புகிறேன்” என குறிப்பிட்டார். அதை தொடர்ந்து மசோதாவை சின்ஹா திரும்ப பெற்றார். அப்போது அவர் கூறியதாவது ” மக்கள்தொகையை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறேன்.

அரசியலமைப்பு சாசனப்படி ஜாதி மத மொழி மற்றும் பிராந்திய அடிப்படையில் நம்மால் கட்டுப்படுத்தமுடியும். நமது அரசின் முழு முயற்சிகள் அரசியலமைப்பு சாசனபடியே அமைந்துள்ளது. இனி எமெர்ஜென்சி தேவைப்படாது. ஹிந்து இஸ்லாமியர்,பார்சியர் கிறித்தவர்கள் என குறிப்பிடுவது அரசியலமைப்பின்படி தவறு. இங்கே அது குறிப்பிடப்படவில்லை.

```
```

1901 முதல் 2011 வரையிலான காலகட்டங்களில் ஹிந்துக்கள் 13.8 சதவிகிதம் குறைந்துள்ளனர். அதே நேரத்தில் இஸ்லாமிய மக்கள்தொகை 9.8% சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறைந்திருப்பதை பற்றியோ அல்லது கூடியிருப்பதை பற்றியோ நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால் உண்மையில் இருந்து நீங்கள் விலகிப்போக முடியாது” என குறிப்பிட்டார்.

rakesh sinha mp

மேலும் பிஜேபி உறுப்பினர்கள் கே.ஜெ அல்போன்ஸ், விஜய் பால்சிங் தோமர், ஹர்ஷ்வர்தன் சிங் துங்கர்புர் ஆகியோர் குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள்தொகை மட்டும் அதிகரிப்பதை பற்றி கேள்வியெழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாமில் முஸ்லீம் ஹிந்து என எந்த சமூகத்தினராக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு சலுகை கிடைக்காது என முதல்வர் ஹிமந்தா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா