Actor Babloo Prithiveeraj Sheetal தமிழ் சினிமா மற்றும் சீரியல் என இரண்டு துறைகளிலும் பிரபலமாக அறியப்படுபவர் பப்லு பிருத்விராஜ். 57 வயதாகும் இவர், சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த 26 வயது ஷீத்தல் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவ, அதை மறுத்த பிருத்விராஜ் இருவரும் லிவின் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக கூறினார். இருவரும் இணைந்து ஒன்றாக காதல் பறவைகளாக வலம் வந்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமாண்டிக் வீடியோக்களாக பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சமீப நாட்களாக இருவரும் எந்த வீடியோவையும் பதிவிடவில்லை. சமீபத்தில் பப்லு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய போதும் ஷீத்தல் அவருடன் இல்லை. மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த ஏற்கனவே பகிர்ந்த வீடியோக்களையும் ஷீத்தல் டெலிட் செய்தனர்.
Did Babloo Prithiveeraj and Sheetal Brokeup?

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஷீத்தலிடம் “நீங்கள் இருவரும் இப்போது பிரிந்து விட்டீர்களா?” என கமெண்ட் செய்ய, அந்த கமெண்ட்டை லைக் செய்துள்ளார் ஷீத்தல். இதன் மூலம் இருவரும் பிரிந்தது உறுதியாகியுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Actor Babloo Prithiveeraj Sheetal Breakup Reason
ஆனால் தாங்கள் இன்னும் பிரியவில்லை என்றுதான் சொல்லி வருகிறார் பிருத்விராஜ். இது சம்மந்தமான கேள்விக்கு “நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக நாங்கள் எங்குமே சொல்லவில்லை. நீங்களாக நாங்கள் பிரிந்துவிட்டோம் என்கிறீர்கள். நான் ஒரு நடிகன். என் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுக்க வேண்டியது என் வேலை. அதை விட்டுவிட்டு என் அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைப்பது அநாகரிகம். நான் என்ன செய்தாலும் விமர்சிக்கவும், ஆதரிக்கவும் 10 பேர் இருப்பார்கள். என் தனிப்பட்ட விசயங்களை பொதுவெளியில் வைக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

பப்லு இப்படி சொன்னாலும் இருவரும் பிரிந்துவிட்டது உறுதி என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இருவரின் பிரிவுக்கும் காரணம் பப்லுதான் என்று கூறியுள்ளார் சினிமா கிசுகிசு ஸ்பெஷலிஸ்ட் பயில்வான் ரங்கநாதன். இது பற்றி ஒரு நேர்காணலில் “இருவரும் காதல் பறவைகளாக கடந்த 7 மாதங்களாக சுற்றி வந்தனர். விரைவில் திருமணம் செய்துகொள்ளவும் இருந்தனர். ஆனால் திருமண திட்டத்தை பப்லு தள்ளிப் போட்டுக்கொண்டே வந்துள்ளார்.
Real Reason for Actor Babloo Prithiveeraj and Sheetal Breakup
தனது உடல் தேவைக்காக மட்டும் ஷூத்தலை அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு முதல் திருமணத்தில் ஸ்பெஷல் சைல்ட் இருக்கிறார். அதனால் இன்னொரு திருமண உறவில் லாக் ஆகக் கூடாது என நினைத்திருக்கிறார். இப்படி சுயநலமாக நடந்துகொண்ட பப்லுவை இப்போது ஷூத்தல் பிரிந்துவிட்டார்.இதுதான் இருவரின் பிரிவுக்கும் காரணம்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
FAQ:
