Saturday, April 18, 2026
Home > Cinema > பணத்துக்கா கனகாவின் தாயே வயதான நபருடன் அதை செய்யவைத்தார் !! வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் கனகா… ?- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்

பணத்துக்கா கனகாவின் தாயே வயதான நபருடன் அதை செய்யவைத்தார் !! வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் கனகா… ?- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பயில்வான்

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கனகா. அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ரஜினியோடு சேர்ந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். பெரிய உயரங்களை தொட்டாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய காமெடி நடிகர் விவேக்குக்கு ஜோடியாக விரலுக்கேத்த வீக்கம் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

கனகாவின் அம்மா தேவிகா, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கும் சினிமா உதவி இயக்குனருக்கும் திருமணம் ஆக அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கனகா. ஒரு கட்டத்தில் தாய் தேவிகா மரணத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார் கனகா. அதுமட்டுமில்லாமல் அவரது தந்தையோடு ஏற்பட்ட சொத்து தகராறும் அவரை மனதளவில் பாதித்தது.

இதனால் சென்னையில் இருக்கும் தனது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் கனகா. ஒருமுறை அவர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போதுகூட அவர் வெளியில் வராமல் முரண்டு பிடித்தார். சினிமா உலகில் அவருக்கு நெருக்கமானவர்கள் எத்தனையோ பேர் அவரை சந்திக்க முயன்றும் யாரையும் அவர் சந்திக்கவில்லை. அவரை அறிமுகப் படுத்திய இயக்குனர் கங்கை அமரனைக் கூட சந்திக்க மறுத்துவிட்டார்.

திருமணமே செய்துகொள்ளாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவரை சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி  சந்தித்து, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில் கனகா குண்டான தோற்றத்தில் ஆள் அடையாளமே தெரியாத விதத்தில் காணப்பட்டார். பலரும் அவரின் தோற்றத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.

இந்நிலயில் கனகாவின் தற்போதைய நிலைக்கு காரணம் அவரின் தாயார் தேவிகா செய்த ஒரு செயல்தான் என சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சியான கருத்தைக் கூறியுள்ளார். அதில் “கனகாவின் அம்மா தேவிகாவும், தெலுங்கு பழம்பெரும் நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான என் டி ராமராவும் நெருங்கிய நண்பர்கள். அரசியலில் ஈடுபட்ட என் டி ஆர் தான் முதலமைச்சர் ஆகவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட ராசியில், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

உடனே தேவிகா, தன் மகள் கனகா அந்த நட்சத்திரம், அந்த ராசியில் பிறந்தவர்தான் எனக் கூறி அவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் மட்டும்தான் நடந்தது. வேறு எதுவும் இல்லை. இதனால்தான் கனகா மனநலம் பாதிக்கபட்டார்” எனக் கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதன் சொல்லும் சம்பவங்களில் பாதிக்கு பாதி உண்மையாக இருக்காது என்பதால் இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரியவில்லை.