Monday, May 20, 2024
Home > பங்குச் சந்தை > இந்திய பேங்கிங் பங்குகள் லாபமா..!? ஒரு அலசல்

இந்திய பேங்கிங் பங்குகள் லாபமா..!? ஒரு அலசல்

15.1.22/15.12pm


2020-2021 நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் பேங்கிங் பங்குகள் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. பல வங்கிகளின் வராக் கடன் சுமையை சாமாளிக்க பல சிறிய வங்கிகள் இணைப்புகளாலும், மல்லையா போன்ற சில பெரிய கடன்கள் வசூலித்த பிறகும் பெருமளவில் குறைந்த போதிலும் கோவிட் இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு காலாண்டு முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் ஜிடிபியும் சரிந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பொதுத் துறை வங்கிகளான ( ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தவிர்த்து ) மற்ற வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் பேங்க் போன்ற பொது துறை வங்கிகளின் பங்குகள் முன்னேற்றம் அடையவில்லை.

ஆனால் தனியார் வங்கிகளான ஹடிஎப்சி, ஜசிஜசிஜ, கோடக் வங்கி, இண்டஸ் இண்டு, சியூபி மற்றும் இதர தனியார் வங்கிகளின் பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

வரும் பிப்ரவரி மாதம் பட்ஜெட், நான்காம் காலாண்டு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை நல்ல முறையில் அமையும் வகையில் போது துறை வங்கிகளின் பங்குகள் முன்னேற வாய்ப்புள்ளது.

`

குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஹடிஎப்சி, ஜசிஜசிஜ பங்குகள் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. ஒரு வருட கால இலக்கு வைத்து இந்த பங்குகள் வாங்கினால் நல்ல லாபம் அடைய வாய்ப்புள்ளது.

சௌந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்.

```
```

Disclaimer: We are not a registered advisor of SEBI. Please contact registered advisor before making any investment

#bankingstocks #stockmarket