Friday, April 17, 2026
Home > Cinema > பாபநாசம் படத்தில் நடித்த இவரின் மகளுக்கு திருமணம் !! இளம் வயது முதல் மகளின் திருமணம் வரை அரிய புகைப்படங்கள்!!

பாபநாசம் படத்தில் நடித்த இவரின் மகளுக்கு திருமணம் !! இளம் வயது முதல் மகளின் திருமணம் வரை அரிய புகைப்படங்கள்!!

நடிகை ஆஷா சரத் இவரை பாபநாசம் படத்தில் வரும் போலீஸ் அதிகாரியாக நமக்கு தெரியும் . ஆனால் ஆஷா ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். அவரது தாயாரும் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் அதனால் ஆஷா தனது 3 ஆவது வயதிலேயே நடனம் கற்க துவங்கிவிட்டனர்.

பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஆஷா சரத். பாபநாசம் படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக அதிரடியாக நடித்த கவனத்தை ஈர்த்தார்.

1974 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த ஆசா சரத் இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்று பரதநாட்டிய கலைஞராக மாறினார். பின்னர் தனது 19 ஆவது வயதிலேயே சர்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு துபாய் சென்ற இவர் அங்கு சில காலம் கணவருடன் வாழ்ந்தார். இவருக்கு உதாரா , கீர்த்தனா என்ற இரு மகள்களும் உண்டு. மேலும் இவருக்கு ஒரு மகனும் இருந்தார் ஆனால் அவர் இளம் வயதிலேயே உயிரிழந்தார்.

என்னா தான் ஆசா சரத் ஒரு பரதநாட்டிய கலைஞராக இருந்தாலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தான் முதல் முதலில் அறிமுகமானார்.

முதல் முதலில் ஆசா சரத் சினிமாவில் அறிமுகமானது 2012 ஆம் ஆண்டு வெளியான பிரைடே என்ற மலையாள படத்தில் தான். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த ஆசா சரத் பெரிதாக பேசப்பட்டது திரிஷயம் படத்தில் இவர் நடித்த பின்பு தான்.

திர்ஷியம் படத்தை தமிழில் பாபநாசம் என்று கமல் உருவாக்கியபோது தமிழில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார் ஆசா சரத். அதன் மூலம் தமிழில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் இவர் . பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார்.

இப்போது ஆசா சரத் மூத்த மகள் உத்தாறா சரத்திர்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 1998 ஆம் ஆண்டு பிறந்த உத்தாரா ஒரு பரதநாட்டிய கலைஞர். இவர் ஆதித்யா மேனன் என்ற தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்துகொண்டார்.

இப்போது ஆசா சரத் குடும்பம் மற்றும் அவரது மகளின் திருமண புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.