தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள அழைத்தனர். அவர் நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதனால் அவர் சம்பளமும் பல மடங்கு எகிறி இப்போது 10 கோடிரூபாயில் நிற்கிறது.

ஆனால் சமீபகாலமாக அவர் கதையின் மையப் பாத்திரமாக நடிக்கும் எந்த படங்களும் ஹிட்டாவதில்லை. அதற்கு சமீபத்தைய உதாரணம் அன்னபூரணி திரைப்படம். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பலத்த அடி வாங்கிய நிலையில் ஓடிடியில் ரிலீஸான போது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதனால் வடநாட்டில் உள்ள ஒரு இந்துதுவ அமைப்பு இந்த படத்துக்கு எதிராக புகார் கொடுக்க, நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக இந்த படம் தூக்கப்பட்டுள்ளது.

இப்போது மண்ணாங்கட்டி, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துவரும் நயன்தாரா பற்றி சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் அளித்த ஒரு நேர்காணலில் ”அப்போது நயன்தாரா பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. கஜினி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் அணிந்திருந்த சட்டை கொஞ்சம் ஓவர் ட்ரான்ஸ்பரண்டாக ஆபாசமாக இருப்பதாக முருகதாஸ் நினைத்துள்ளார். அதனால் வேறு சட்டை மாற்ற சொல்லியுள்ளார்.

உதவி இயக்குனர்களும் வேறு சட்டை கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஷூட்டிங் நடுரோட்டில் நடந்ததால் அங்கு கேரவன் கூட இல்லை. அதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மறைவில் சென்று அந்த உடையை மாற்றி வந்தாராம் நயன்தாரா” என அதில் கூறியுள்ளார் அந்தணன்.
