Thursday, May 21, 2026
Home > Cinema > நயன்தாரா போலவே திருமண ஒளிபரப்பை ஓடிடிக்கு விற்று கல்லா கட்டிய ஹன்சிகா!

நயன்தாரா போலவே திருமண ஒளிபரப்பை ஓடிடிக்கு விற்று கல்லா கட்டிய ஹன்சிகா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முண்ணனி நடிகையாக வலம் வருபவர் ஹனிசிகா. குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அதனால் ஒரு கட்டத்துக்கு மேல்  அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.  தற்போது அவர் கைவசம் தமிழ் உள்பட எந்த மொழிகளிலும் பெரிதாக படங்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. இந்நிலையில் இப்போது ஹன்சிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக உள்ளார்.

தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள உள்ளார். இதுவரை மணமகன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்த ஹன்சிகா முதல் முதலாக வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் ஹன்சிகாவை இப்போது மணக்க உள்ள சோஹைல் கதூரியா கடந்த 2017 ஆம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆனவராம். அதற்குப் பின்னர் அவருக்கு விவாகரத்து நடந்து இப்போது ஹன்சிகாவை மணக்க உள்ளார். இதில் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் சோஹைலின் முதல் திருமணத்துக்கு ஹன்சிகா சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் ஹன்சிகா தன்னுடைய திருமண வீடியோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடிக்கு பெரும் தொகைக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.