தமிழ் சினிமாவில் வாலி என்ற ஹிட் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா. அதன் பின்னர் அவர் இயக்கிய குஷி படமும் சூப்பர் ஹிட்டானது. இந்த படங்களுக்கு பிறகு அவர் தன்னையே கதாநாயகனாக்கி படங்களை இயக்க தொடங்கினார். அதன் பின்னர் அவர் மற்ற ஹீரோக்களை இயக்கவில்லை.
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த போது ஹிட்களை கொடுத்த அவர் பின்னர் சறுக்க தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகளே இல்லாத சூழல் உருவானது. அதன் பின்னர் அவர் நடித்த இறைவி திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைய, இப்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார்.

இப்போது 56 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் “நானும் ஒரு பெண்ணை காதலித்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய காதலி ஒரு பார்ட்டி வைத்து என்னை அழைத்திருந்தார்.
ஆனால் அன்று ஒரு தயாரிப்பாளர் என்னை ஒரு திரைப்படம் சம்மந்தமாக பேசுவதற்கு அழைத்ததால் நான் அங்கு சென்றுவிட்டேன். அந்த மீட்டிங் முடியவே 12 மணியாகிவிட்டது. அதன் பிறகு நான் என் காதலியை பார்க்க சென்றேன். அவர் என் மேல் உள்ள கோபத்தில் ‘நீ நினைத்த போது வர இது ஒன்னும் சத்திரம் இல்லை’ என சொல்லி என் பளாரென கதவை சாத்திவிட்டார். அதன் பிறகு அவர் என்னை பார்க்கவோ பேசவோ இல்லை. அதன் பிறகு நானும் யாரையும் திருமனம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
